Wählen Sie Ihre Sprache aus / உங்கள் மொழியை தெரிவுசெய்யுங்கள்:

Deprecated: Methods with the same name as their class will not be constructors in a future version of PHP; JSNUtils has a deprecated constructor in /customers/0/0/7/tbvgermany.com/httpd.www/tbv/templates/jsn_epic_free/includes/lib/jsn_utils.php on line 10

புலம் பெயர்ந்த நாடுகளின் கல்வி நிறுவனங்களை ஒருங்கினைத்து தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் நடாத்தப்பட்ட பொதுத்தேர்வில் யேர்மனியின் தமிழ்க் கல்விக் கழகத்தின் 130 தமிழாலயங்கள் இணைந்து தேர்வெழுதியுள்ளன. 130 தமிழாலயங்களிலிருந்து 5300 மாணவர்கள் கடந்த 15.05.2010 சனிக்கிழமை நடைபெற்ற புலன்மொழிவளத் தேர்வில் கலந்துகொண்டனர். அத்தேர்வு ஒவ்வொரு தமிழாலயங்களிலும் நடைபெற்றது. தேர்வை 650 க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் மேற்பார்வை செய்தனர். அதன் இரண்டாவது பகுதியான அறிமுறைக்கான தேர்வு இன்று 05.06.2010 சனிக்கிழமை 09:30 மணிக்கு ஆரம்பமாகி 13:30 மணிவரை நடைபெற்றது. யேர்மனியிலுள்ள 130 தமிழாலயங்களிலிருந்து தேர்வெழுதிய 5300 மாணவர்களின் வசதிகருதி 65 விசேடமான தேர்வு நிலையங்கள் அமைக்கப்பட்டன. அத் தேர்வை 500 க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் மேற்பார்வை செய்தனர்.

அடுத்துவரும் வாரங்களில் விடைத்தாள்கள் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் பாரீஸ் நகரிலுள்ள அவர்களின் நடுவச் செயலகத்தில் சரிபார்க்கப்பட்டு யூன்மாத இறுதியில் சர்வதேச ரீதியிலான தகமைச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.

இன்று அதே தேர்வு நிலையங்களில் 14:00 மணிக்கு யேர்மன் கல்விக் கழகத்தின் 130 தமிழாலயங்களின் மாணவர்களுக்கு சுற்றாடல் / சமூகக்கல்வி ஆகிய பாடங்களுக்கான பொதுத்தேர்வைத் தமிழ்க் கல்விக் கழகத்தின் தேர்வுப் பிரிவு நடாத்தியது. அத்தேர்விலும் 4600 க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களின் விடைத்தாள்கள் யேர்மனியில் எமது தேர்வுப்பிரிவினால் சரிபார்க்கப்பட்டு தமிழ்க் கல்விக் கழகத்தினால் தகைமைச் சான்றிதழ் வழங்கப்படும்.

நிகழ்வுகளின் படத்தொகுப்பு

Free business joomla templates