அகவைநிறைவின் மகிழ்வோடு சோலிங்கன் தமிழாலயம்

ஒக்டோபர்17 2026 அன்று 12:00மணிக்குத் தாயகம், மொழி, கலை மற்றும் பண்பாடு என்பற்றைக் காத்திடும் நோக்கோடு களத்திலும் உலகத்திசைகளிலும் வித்தானோரை அகமேந்திப் பொதுச்சுடரை தமிழர் ஒருங்கிணைப்புக் குழவின் சோலிங்கன் கோட்டப் பொறுப்பாளர் ‘தமிழ் மாணி’ திரு. நமசிவாயம் தருமராசா அவர்கள் பொதுச்சுடரை ஏற்றிவைக்கச் சோலிங்கன் தமிழாலயத்தின் 35ஆவது அகவை நிறைவுவிழா தொடங்கியது.

சிறப்பு விருந்தினர்களோடு இணைந்து தமிழாலய மாணாக்கர் மற்றும் ஆசிரியரையும் தமிழினத்தின் பண்பாடு தழுவி வாழத்;திசைப்பாவுடனான வரவேற்றமையை அடுத்து அரங்க நிகழ்வுகள் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனியக் கிளைப் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறீரவீந்திரநாதன், Alternative Bürgerinitiative (ABI) எனும் மாற்றத்திற்கான குடிமக்கள் இயக்கத்தைச் சேர்ந்த சோலிங்கன் நகராட்சி மன்ற உறுப்பினர் திரு. ராசிம் செரின், சோலிங்கன் நகர முதல்வர் திருமதி இயோஅன்னா ஸகறாகியின் துணைப் பிரதிநிதியான திரு. கொன்ஸ்டான்டின் எலெஃப்தெரியாடிஸ், சோலிங்கன் நகரக் குடிவரவாளர் உதவியகத்தின் மேலாளர் கரென் ரூகெல், சோலிங்கன் தொழில்நுட்பக் கல்லூரி (TBK) மற்றும் தொழிற்கல்விப் பள்ளிகளின் ஆசிரியரும், கைத்தொழில் துறையின் கட்டுமானம் மற்றும் எரிசக்தித் தொழில்நுட்பப் பிரிவின் தலைவருமான திரு. அன்றியாஸ் வெபர், த.ஒ.குழுவின் மத்திய மாநிலப் பொறுப்பாளர் திரு. சின்னையா நாகேஸ்வரன், தமிழ்க் கல்விக் கழகப் பொறுப்பாளர் ‘செம்மையாளன்’ திரு. செல்லையா லோகானந்தம், கலைப்பிரிவுப் பொறுப்பாளர் திரு. மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி, மற்றும் மூத்த ஆசிரியரான ‘தமிழ் மாணி’ திருமதி தேவிமனோகரி தெய்வேந்திரம் ஆகியோர் மங்கல விளக்கினை ஏற்றி வைக்க அரங்க நிகழ்வுகள் தொடங்கின. அகவணக்கம், தமிழாலயப்பண் என்பனவற்றைத் தொடர்ந்து சோலிங்கன் தமிழாலய நிருவாகி திரு. குமாரசாமி நந்தகுமார் அவர்கள் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

ஆசியர்களுக்கான மதிப்பளிப்பைத் தமிழ்க் கல்விக் கழகப் பொறுப்பாளர் ‘செம்மையாளன்’ திரு. செல்லையா லோகானந்தம் அவர்கள் வாழ்த்தி வழங்கி வைத்தார்.
முத்தமிழ் கலை நிகழ்வுகள் அணிசெய்து அரங்கைச் சிறப்பித்தன. மதிப்பளிப்புகளும் இடம்பெற்றன. தொடர்ந்து 35ஆவது அகவை நிறைவைச் சிறப்பிக்கும் வகையிற் சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. பெற்றோர் ஒளியேந்திப் பண்ணிசையோடு அரங்கிற்கு எடுத்து வந்த சிறப்பு மலரைத் தமிழ்க் கல்விக் கழகப் பரப்புரைப் பொறுப்பாளர் திரு. தர்மலிங்கம் தீபன் வெளியிட்டுவைத்து வெளியீட்டுரையாற்றினார். முதற் பிரதியைச் சோலிங்கன் தமிழாலய முன்னாள் உதவி நிருவாகியான திரு. கிட்டிணபிள்ளை சண்முகரட்ணம் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
தமிழாலயத்தின் முன்னாள் செயற்பாட்டாளர்களுக்கான மதிப்பளிப்பைத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனியக் கிளைப் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறீரவீந்திரநாதன் அவர்கள் வழங்கியதோடு சிறப்புரையாற்றினார். தமிழ்த்திறனாளர்களுக்கான மதிப்பளிப்பைக் கலைப்பிரிவுப் பொறுப்பாளர் திரு. மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி வழங்கியதோடு, அவரது வாழ்த்துரையும் இடம்பெற்றது.
தமிழ்க் கல்விக் கழகத்தினர், அயற் தமிழாயங்களின் நிருவாகியர், முன்னாள் ஆசிரியர், முன்னாள் மாணவர், மற்றும் நலன்விரும்பியர் ஆகியோரென மண்டபம் நிறைந்த மக்கள் திரளோடு, சோலிங்கன் நகரிலே இன்னும் பல்லாண்டு தமிழ் தடம் பதிக்கும் என்பதனை எடுத்துரைத்த 35ஆவது அகவைப் பெருவிழா தமிழரின் தாகத்தை அகமேந்தி இலட்சியத்தை அடைவோம் என்ற நம்பிக்கையோடு 21:00மணிக்கு நிறைவுற்றது.

error:
X