Wählen Sie Ihre Sprache aus / உங்கள் மொழியை தெரிவுசெய்யுங்கள்:

தமிழாலயங்களில் பயிலும் மாணவர்களின் மொழிசார்ந்த செய்திறனை வெளிப்படுத்தும் நோக்கில் வருடம் தோறும் தமிழாலயங்களுக்கிடையில் தமிழ்த்திறன் போட்டிகள் நடைபெறுகின்றன. வாசிப்பு, சொல்வதெழுதுதல், உறுப்பமைய எழுதுதல், ஆத்திசூடி,கொன்றை வேந்தன், திருக்குறள் போன்ற மனனப் போட்டிகளுடன் உரையாற்றல், கவிதை ஓவியம் போன்ற விடயங்களை முதன்மைப்படுத்தி போட்டிகள் நடைபெறுகின்றன.

தமிழ்த்திறன் போட்டிகள் மூன்று நிலைகளில் நடைபெறுகின்றன. முதற்கட்டமாக ஒவ்வொரு தமிழாலயங்களும் தமது மாணவர்களை உள்ளடக்கிய நிலையில் போட்டிகளை நடாத்துகின்றன. அப்போட்டிகளில் வயதுப்பிரிவு அடிப்படையில் முதலாவது நிலையை அடையும் மாணவர்கள் மாநிலமட்டத்தில் நடைபெறும் இரண்டாம் கட்டமான போட்டியில் கலந்துகொள்வார்கள். மாநிலப் போட்டி நாடுமுழுவதிலுமுள்ள 130 க்கு மேற்பட்ட தமிழாலயங்களை ஒருங்கிணைத்து ஒரே நாளில் ஆறு போட்டிநிலையங்களில் நடாத்தப் படுகின்றன. மாநிலப் போட்டிகளில் பங்குபற்றி வயதுப்பிரிவு ரீதியாக முதல் மூன்று நிலைகளை அடையும் மாணவர்கள் தமிழ்த்திறன் இறுதிப் போட்டியில் கலந்துகொள்வார்கள். இறுதிப் போட்டியில் கலந்துகொன்டு முதல் மூன்று நிலைகளை அடையும் மாணவர்கள் தமிழ்த்திறன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான சிறப்புக் கௌரவத்தை வருடாந்த ஆண்டுவிழாவின்பொது பெறுகின்றார்கள்.

தமிழ்த்திறன் போட்டிகளைத் திட்டமிட்டுச் சிறப்பாக நடாத்துவதற்கெனத் தனித்துவமான ஒரு பிரிவு நியமிக்கப்பட்டு அதற்கென ஒரு பொறுப்பாளரின் முன்னெடுப்பில் செயற்பாடுகள் நடைபெறுகின்றன. தமிழ்த்திறன் பிரிவினரின் செயற்திட்டங்கள் தமிழாலய நிர்வாகிகள், ஆசிரியர்களின் ஒருங்கிணைப்புடன் முன்னெடுக்கப்படுகின்றன. போட்டிகளைத் தமிழாலயமட்டத்தில் நடாத்துவதற்கெனத் தமிழாலயங்களும் தனித்துவமான தமிழ்த்திறன் போட்டிச் செயற்பாட்டுப்பிரிவுகளை நியமித்துச் செயற்பட்டுவருகின்றன. போட்டிகளை நடுவம் செய்வதற்குத் தமிழாலயங்களின் ஆசிரியர்களே பயன்படுத்தப்படுகின்றார்கள். நடுவர்களாகச் செயலாற்றுபவர்களுக்கு வருடம் தோறும் விசேடமாக பயிற்சிபட்டறைகள் நடாத்தப்படுகின்றன.

போட்டிகளில் பங்குபற்றி மூன்று நிலைகளிலும் முதல் மூன்று நிலைகளைப் பெறும் மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்படுவதுடன். இறுதிப் போட்டியில் பற்குபற்றும் அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்புக்கான விசேட சான்றிதழ்களும், வெற்றிப்பதக்கங்களும் வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்படுகின்றனர்.

போட்டிகளில் வழங்கப்படும் சான்றிதழ்கள் இணைக்கப்பட்டுள்ளன.
 
Free business joomla templates