Wählen Sie Ihre Sprache aus / உங்கள் மொழியை தெரிவுசெய்யுங்கள்:

தமிழாலயங்களின் மாணவர்களுக்கான தேர்வுகளை நடாத்தும் முக்கிய செயற்பாட்டுக்குப் பொறுப்பாகத் தேர்வுப்பிரிவு இயங்கிவருகின்றது.

தமிழ்மொழிக்கான தேர்வுகள் இரு காலப்பகுதியில் நடைபெறுகின்றன. டிசெம்பர் மாதத்தில் அரையாண்டுத்தேர்வும் யூன்மாதத்தில் வகுப்பேற்றும் பொதுத் தேர்வும் ஒரே நாளில் பலநாடுகளில் சமநேரத்தில் நடைபெறுகின்றது. இருப்பினும் தமிழ்மொழிக்கான செய்முறைக்கு 30 வீதம் தமிழாலயங்களிலும் அறிமுறைக்கான 70 வீதம் வினாத்தாள்கள் மூலமாகவும் இரு முறைகளில் நடாத்தப்படுகின்றன. பொதுத் தேர்வில் சித்தியடையும் மாணவர்களுக்கு சர்வதேசத் தரத்திலான சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வகுப்பேற்றம் செய்யப்படுகின்றது. பொதுத் தேர்வில் மாணவர்களுக்கு வழங்கப்படும் தகுதிநிலைச் சான்றிதழும், ஆசிரியர்களுக்கு கற்பித்தற் செயலமர்வுகளில் வழங்கப்படும் பங்கேற்புச் சான்றிதழ்களும் இணைக்கப்பட்டுள்ளன.
 
Free business joomla templates