தமிழீழம், கிளிநொச்சி ஜெயந்தி நகரைப் பிறப்பிடமாகவும் யேர்மனி சீர்ஸ்பூர்க் நகரை வசிப்பிடமாகவும் கொண்டு வாழ்ந்தவரும் டில்லிங்கன் தமிழாலயத்தில் 19ஆண்டுகளுக்கு மேலாக நிர்வாகியாகத் தமிழ்ப் பணியாற்றிய உயர் திரு. கணபதிப்பிள்ளை தேவராஜா அவர்கள் சென்ற 09.10.2023 திங்கட்கிழமை சாவடைந்துள்ளார். அவரின் இறுதி வணக்க நிகழ்வு 13.10.2023 வெள்ளிக்கிழமை அவர் வாழ்ந்த நகரத்தில் நடைபெற்றது. புலம்பெயர் நாட்டில் தமிழ்ப் பணியாற்றிய அவருக்குத் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகத்தால் ‘தமிழ்ப்பற்றாளர்’ எனும் பட்டம் வழங்கி மதிப்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.