தமிழ்த்திறன் பிரிவு
தமிழாலயங்களில் தமிழ்மொழியைப் பயின்றுவரும் மாணவர்கள் தாம் பயிலும் மொழியின் வளத்தை மேம்படுத்தும் பொருட்டு ஆண்டுதோறும் தமிழ்க் கல்விக் கழகம் தமிழ்த்திறன் போட்டியை நடாத்தி வருகின்றது. தமிழாலயம், மாநிலம், இறுதி என மூன்று மட்டத்தில் நடாத்தப்பட்டுவரும் தமிழ்த்திறன் போட்டி, ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நறுந்தொகை, திருக்குறள் போன்ற மனனப் போட்டிகளும் உரையாற்றல், கவிதை, வாசிப்பு, உறுப்பமைய எழுதுதல், சொல்வதெழுதுதல், கட்டுரை, ஓவியம் போன்ற போட்டிகளும் நடைபெற்று வருவது சிறப்பிற்குரியது.
அடுத்து வரும் நிகழ்வுகள்
மார்ச் 2026
07மார்ச்நாள் முழுவதும்தமிழ்த்திறன் இறுதிப் போட்டி 2025நிகழ்வுகள் :தமிழ்த்திறன்
நேரம்
நாள் முழுவதும் (சனி)
இடம்
Hans-Jonas-Gesamtschule Neuwerk
Nespelerstraße 75
புதியவை
தமிழ்த்திறன் மாநிலப் போட்டி 2025
புலம்பெயர்ந்து யேர்மனியில் வாழும் தமிழ்க்குமுகத்தின் இளையவர்கள் தமிழ்மொழியைக் கற்பதோடு மட்டுமல்லாமல், அதில் ஆற்றல்மிக்கவர்களாக வளர்த்தெடுக்கும் நோக்கில் தமிழ்க் கல்விக் கழகத்தால் ஆண்டுதோறும் தமிழ்த்திறன் போட்டி நடாத்தப்பட்டுவருகிறது. இப்போட்டியானது தமிழாலயம், மாநிலம் மற்றும் நாடுதழுவிய மட்டம்
31 ஆண்டுகள் கடந்து தனிச்சிறப்புடன் விளங்கும் தமிழ்த்திறன்
35ஆண்டுகளுக்கு முன் தமிழாலயங்களில் விதைக்கப்பட்ட தமிழ்மொழியின் அறுவடை அளவுகோல்களில் ஒன்றான தமிழ்த்திறன் போட்டியானது, தமிழாலய மாணவர்களிடையே 31ஆண்டுகளாக நடாத்தப்பட்டு வருகின்றது. தமிழாலய மட்டத்திலும் மாநில மட்டத்திலும் நடைபெற்ற தமிழ்த்திறன் போட்டியில் தமது தமிழ்த்திறனை வெளிப்படுத்திய
தமிழ்த்திறன் மாநிலப் போட்டி 2024
தமிழ்க் கல்விக் கழகத்தின் தமிழ்த்திறன் பிரிவால் ஆண்டுதோறும் தமிழாலய மாணவர்களிடையே நடாத்தப்பட்டுவரும் தமிழ்த்திறன் போட்டி தமிழாலயம், மாநிலம் மற்றும் யேர்மனி தழுவிய மட்டத்தில் என மூன்று நிலைகளில் நடாத்தப்பட்டு வருகின்றன. தமிழாலயங்கள் தமது மாணவர்களிடையே
