கல்விப்பிரிவு
யேர்மனிய நாட்டில் பல்லின மொழி, பண்பாடுகளுக்கிடையில் தமது வாழ்வை அமைத்துக் கொண்ட தமிழீழக் குழந்தைகளுக்கு, அவர்களின் தாய்மொழியைக் கற்பிப்பதிலும் அதன் சிறப்பு, தொன்மை, தனித்தன்மை என்பவற்றை அறியப்படுத்துவதிலும் தமிழ்க் கல்விக் கழகத்தின் கல்விப்பிரிவு பணியாற்றி வருகின்றது. தமிழாலயங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் தாய்மொழியிற் குறையாத அறிவும் அவர்களை நல்ல பண்புமிக்கவர்களாக உருவாக்குவதிலும் முனைப்புடன் செயலாற்றி வருகின்றது.
மாநிலக் கல்விப்பிரிவுச் செயற்பாட்டாளர்கள்
அடுத்துவரும் நிகழ்வுகள்
நிகழ்வுகள் இல்லை
புதியவை
அனைத்துலக மட்டத்தில் நடாத்தப்பட்ட அறிவாடல் போட்டி 2024
அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் வழிகாட்டலில் அறிவாடல் ஒருங்கிணைப்புக் குழுவால் 21.09.2024 சனிக்கிழமை அனைத்துலக மட்டத்தில் அறிவாடல் போட்டி நடாத்தப்பட்டது. அறிவாடல் போட்டியின் முதற்சுற்றில், யேர்மனியத் தமிழாலயங்களிலிருந்து பங்குபற்றிய மாணவர்களில் 33 மாணவர்கள்;
தமிழாலயங்கள் கொண்டாடி மகிழ்ந்த வாணி விழாவும் ஏடுதொடக்குதலும்
கல்விக் கடவுளான கலைமகளைப் போற்றிக் கொண்டாடப்படும் வாணி விழாவின் சிறப்பு வழிபாடானது தமிழ்க் கல்விக் கழகத்தின் கீழியங்கிவரும் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களில் பெரும்பாலான தமிழாலயங்களில் சிறப்புடன் நடைபெற்றது. நவராத்திரி விழாவின் பத்தாம் நாளான 12.10.2024
தமிழ்க் கல்விக் கழகத்தினால் நடாத்தப்பட்டுவரும் ஆசிரியர்களுக்கான பயிலரங்கு
யேர்மனியில் தமிழ்க் கல்விக் கழகத்தின் கீழியங்கும் 110க்கு மேற்பட்ட தமிழாலயங்களின் இளநிலை ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் நோக்கில் மேற்படி பயிலரங்கு 11.11.2023 சனிக்கிழமை வடமத்திய மாநிலத்தில் தொடங்கியதையடுத்து, 12.11.2023 ஞாயிற்றுக்கிழமை மத்திய மாநிலத்துக்கான