எம்மைப்பற்றி
எழுபதுகளின் பிற்பகுதியில் ஏற்பட்ட தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பக்கவிளைவுகளால் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து யேர்மனியில் புகலிடம் தேடிய தமிழீழத் (ஈழம், இலங்கை) தமிழர்கள் நாம்.
யேர்மனியில் பிறந்து வளரும் எமது பிள்ளைகள், எமது தாய்மொழியையும், பண்பாட்டையும் கற்கவேண்டுமென்ற உயர்ந்த இலக்குடன் 1990ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உலகத் தமிழர் இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கினோம். 2004ஆம் ஆண்டிலிருந்து அவ்வமைப்பு தமிழ்க் கல்விக் கழகம் என்ற பெயருடன் 100ற்கு மேற்பட்ட நகரங்களில் “தமிழாலயம்” என்ற தமிழ்ப்பள்ளிகளை உருவாக்கி நிர்வகித்து வருகின்றது.