தேர்வுப்பிரிவு

தமிழாலய மாணவர்களின் கல்வி கற்றல் திறனை மதிப்பீடு செய்வதும் அவர்களை அடுத்த வகுப்புக்குத் தரமுயர்த்துவதற்குமாகத் தேர்வுகள் இருவகையாக நடாத்தப்படுகின்றன. பொதுத்தேர்வுக்கான வளப்படுத்தலின் பொருட்டு கல்வியாண்டின் அரைப் பகுதியில் அரையாண்டுத் தேர்வும் இறுதியில்; அறிமுறைத்தேர்வு உட்பட கேட்டல், பேசுதல், வாசித்தல் என்பவற்றை உள்ளடக்கிய புலன்மொழிவளத் தேர்வு இணைந்த அனைத்துலகப் பொதுத்தேர்வும் தமிழ்க் கல்விக் கழகத்தின் தேர்வுப் பிரிவினரால் நடாத்தப்பட்டு வருகிறது. இத் தேர்வுகளுக்கான தேர்வுத்தாள்கள் அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையால் வழங்கப்படுகின்றன.

திரு. சேரன் யோகேந்திரன்

தேர்வுப்பிரிவுப் பொறுப்பாளர்

திரு. இராசையா இரவிச்சந்திரன்

தேர்வுப்பிரிவுத் துணைப்பொறுப்பாளர்

அடுத்து வரும் நிகழ்வுகள்

யனவரி 2027

30யனவரிநாள் முழுவதும்அரையாண்டுத்தேர்வுநிகழ்வுகள் :தேர்வு

யூன் 2027

05யூன்நாள் முழுவதும்அனைத்துலகப் பொதுத்தேர்வுநிகழ்வுகள் :தேர்வு

13யூன்நாள் முழுவதும்புலன்மொழித் தேர்வுநிகழ்வுகள் :தேர்வு

19யூன்நாள் முழுவதும்புலன்மொழித் தேர்வுநிகழ்வுகள் :தேர்வு

புதியவை

அனைத்துலகப் பொதுத்தேர்வு 2026 – அறிமுறைத்தேர்வு

கடந்த 36 ஆண்டுகள் இடையறாது நிலை தளும்பாது தமிழ்ப் பிள்ளைகளுக்;குச் செம்மொழியான தமிழ்மொழியைக் கற்பித்துவரும் தமிழ்க் கல்விக் கழகம், யேர்மனியில் வாழும் தமிழர்கள் மத்தியில் முதன்மை ஒருங்கிணைப்புக் கல்விக் கட்டமைப்பாகத் திகழ்கின்றது. நாடு முழுவதிலும்

Weiterlesen »

அனைத்துலக மட்டத்தில் நடாத்தப்பட்ட அரையாண்டுத்தேர்வு

தமிழாலயங்களில் தமிழ்மொழியைக் கற்றுவரும் தமிழ்ப் பிள்ளைகளின் தமிழ் கற்கும் திறனை மதிப்பீடு செய்யும் பொருட்டு ஒவ்வொரு கல்வியாண்டின் அரைப்பகுதியிலும் அரையாண்டுத் தேர்வானது தமிழ்க் கல்விக் கழகத்தால் நடாத்தப்பட்டு வருகின்றது. தனது நிருவாகத்தின் கீழியங்கும் 100க்கு

Weiterlesen »

அனைத்துலகப் பொதுத்தேர்வு 2025

தமிழீழத்திலிருந்து புலம்பெயர்ந்து வாழும் பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பிள்ளைகளை ஒருங்கிணைத்து அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் ஆண்டுதோறும் அனைத்துலகப் பொதுத்தேர்வு நடாத்தப்பட்டு வருகிறது. அந்தவரிசையில் யேர்மனியில் தமிழ்க் கல்விக் கழகத்தின் கீழியங்கும் 100க்கு மேற்பட்ட

Weiterlesen »

அனைத்துலக மட்டத்தில் நடாத்தப்பட்ட அரையாண்டுத்தேர்வு

தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழியங்கிவரும் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களில் தமிழ்மொழியைக் கற்றுவரும் தமிழ்ப்பிள்ளைகளின் மொழிக் கற்றலை வளப்படுத்தி, கற்கையின் தரத்தை உயர்த்தும் நோக்கோடு, கல்வியாண்டின் நடுப்பகுதியில் அரையாண்டுத் தேர்வானது நடாத்தப்பட்டு வருகிறது.

Weiterlesen »

பதிவிறக்கங்கள்

தேர்வு நிலைய மாற்றத்திற்கான விண்ணப்பப் படிவம்

மீளாய்வு விண்ணப்பப் படிவம்

மீள்தேர்வு விண்ணப்பப் படிவம்

படங்கள்

error:
X