இச்செயற்பாட்டுப் பிரிவு தமிழ்க் கல்விக் கழகத்தில் ஆண்டு முழுவதும் நடைபெறும் செயற்பாடுகளைத் தொகுத்து, வெளிச்சவீடு செயல்திறன் தொகுப்பு ஆவணமாக உருவாக்கி அதனை வெளியீடு செய்தல், தமிழ்க் கல்விக் கழகத்தின் இணையத்தளங்கள், குமுக வலைத்தளங்கள் போன்றவற்றில் தகவல்களைப் பதிவேற்றம் செய்தல், அவற்றைப் பராமரித்தல் மற்றும் தமிழாலயங்களின் அகவை நிறைவு விழாக்களுக்கான மேடைப் பதாகைகள், விழா அழைப்பிதழ், மதிப்பளிப்புப் பட்டயங்கள், சிறப்பு மலர் போன்றவற்றைச் சரிபார்த்து, அச்சிடுவதற்கான அனுமதியை வழங்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.