TBVWebLogo

´தமிழ் வாரிதி உயர் திருமதி ஜெயந்தி கீதபொன்கலன் அவர்களின் இறுதி இரங்கல் வணக்கமும் மதிப்பளிப்பும்

தமிழீழம் யாழ்ப்பாணம் மந்துவில் நகரைப் பிறப்பிடமாகவும் யேர்மனியின் வூப்பற்றால் நகரில் வாழ்ந்தவருமான ´தமிழ் வாரிதி` உயர் திருமதி ஜெயந்தி கீதபொன்கலன் அவர்கள் சென்ற 02.05.2024 புதன்கிழமை உடல்நலக் குறைவால் சாவடைந்தார். திருமதி ஜெயந்தி கீதபொன்கலன் அவர்கள் 22ஆண்டுகளுக்கு மேலாக வூப்பற்றால், கேர்னெ, போகும், முன்சன்கிளாட்பாக் ஆகிய தமிழாலயங்களில் ஆசிரியராகவும் 14.01.2010ஆம் ஆண்டிலிருந்து தமிழ்க் கல்விக் கழகத்தின் கல்விக்குழுச் செயற்பாட்டாளராகவும் தமிழ்க் கல்விக் கழகத்தின் வடமத்திய மாநிலக் கல்விப்பிரிவின் செயற்பாட்டாளராகவும் அனைத்துலக நூலாக்கக் குழுவின் செயற்பாட்டாளராகவும் தமிழ்ப் பணியாற்றி வந்ததுடன், யேர்மன் பெண்கள் அமைப்பின் செயற்பாட்டாளராகவும் பணியாற்றியவர்.

யேர்மனியின் வூப்பற்றால் நகரில் 15.05.2024 புதன்கிழமை நடைபெற்ற அவரது நல்லடக்க நிகழ்வில் அவரின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுடன், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர், செயற்பாட்டாளர்களும் துணை அமைப்புகளின் பொறுப்பாளர்கள், செயற்பாட்டாளர்களும் மற்றும் தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளரும் செயற்பாட்டாளர்களும் ஒருங்கிணைந்து அவருக்கான இறுதி இரங்கல் வணக்கத்தையும் மதிப்பளிப்பையும் நிகழ்த்தினார்கள்.

பொதுச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் தமிழீழத் தேசத்தினால் போற்றப்படும் தேசியக் கொடியையும் ´நாட்டுப்பற்றாளர்` என்ற சிறப்புப் பட்டத்தையும் அவரது துணைவர், பிள்ளைகளிடம் கையளித்தனர். நாட்டுப்பற்றாளர் என்ற சிறப்புப் பட்டத்தைத் தமிழ்க் கல்விக் கழகத்தின் செயற்பாட்டாளரான உயர் திருமதி ஜெயந்தி கீதபொன்கலன் அவர்களுக்கு வழங்கி, அவரது தேசியச் செயற்பாட்டையும் தமிழ்ப்பணியையும் பெருமைப்படுத்தியமை தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். தொடர்ந்து நினைவுரைகள், நினைவுக் கவிதைகளும் இடம்பெற்றன.

error:
X