TBVWebLogo

பென்ஸ்கைம் தமிழாலய மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டி 2024

தமிழ்க் கல்விக் கழகத்தின் கல்வி, கலை, விளையாட்டு என்ற கோட்பாட்டின் வழியைப் பின்பற்றி, பென்ஸ்கைம் தமிழாலயம் இவ்வாண்டும் அயற் தமிழாலயங்களின் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் நகரத்தாரின் ஒன்றிணைவோடு மெய்வல்லுநர்; போட்டிகளை 22.06.2024 சனிக்கிழமை சிறப்பாக நடாத்தியது.

தமிழர் தாயகத்தையும் தமிழ்மொழியையும் காத்திடும் நோக்கோடு களத்தில்; விதையாக வீழ்ந்துவிட்ட மாவீரர்களையும் மக்களையும் நினைவுகூர்ந்து பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. தொடர்ந்து யேர்மனிய நாட்டின் ;தேசியக்கொடி, தமிழீழத் தேசியக்கொடி மற்றும் தமிழாலயக் கொடி ஏற்றப்பட்டு, போட்டியாளர்களால் வெற்றிச்சுடர் மைதானத்தினுள்ளே ஏந்திவரப்பட்டதன் பின், உறுதியேற்புடன் போட்டிகள் தொடங்கின. அயற் தமிழாலயங்களும் இணைய 110க்கு மேற்பட்ட போட்டியாளர்களின் பங்குபற்றுதலோடு போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன.

கல்வி, கலையோடு, மனிதர்களின் உடல் உள வளத்தைப் பேணுவதில் விளையாட்டிற்கும் கணிசமான பங்குண்டு என்பதைத் தமிழாலய மாணவர்களிடையே ஏற்படுத்திட இதுபோன்ற விளையாட்டுப் போட்டி துணைபுரிகிறது. தமிழாலயங்களின் பெற்றோர்கள். மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் நலன்விரும்பிகளின் நிறைவான பங்கேற்பும் போட்டிக்கு வளம் சேர்த்தன. நிறைவாகத் தேசியக் கொடிகளின் கையேற்பையடுத்து, தமிழீழம் மலரும் காலம் வெகுதொலைவில் இல்லை என்ற நம்பிக்கையின் கூட்டுணர்வோடு பென்ஸ்கைம் தமிழாலய மெய்வல்லுநர் போட்டி 2024 நிறைவுற்றது.

error:
X