TBVWebLogo

அனைத்துலக மட்டத்தில் நடாத்தப்பட்ட அறிவாடல் போட்டி 2024

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் வழிகாட்டலில் அறிவாடல் ஒருங்கிணைப்புக் குழுவால் 21.09.2024 சனிக்கிழமை அனைத்துலக மட்டத்தில் அறிவாடல் போட்டி நடாத்தப்பட்டது. அறிவாடல் போட்டியின் முதற்சுற்றில், யேர்மனியத் தமிழாலயங்களிலிருந்து பங்குபற்றிய மாணவர்களில் 33 மாணவர்கள்; இறுதிப்போட்டியில் பங்கேற்பதற்கான தகுதிநிலையைப் பெற்றனர். அதனடிப்படையில் இறுதிப் போட்டியானது சென்ற 20.10.2024 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்ற 33 மாணவர்களில் 12 மாணவர்கள் வெற்றிபெற்றுள்ளனர்.

இவ் அறிவாடல் போட்டியானது மெய்நிகர் ஊடாக கூகுள் படிவத்தின் (google forms) வடிவில் நடைபெற்றதென்பது குறிப்பிடத்தக்கதாகும். தமிழ்க் கல்விக் கழகத்தின் தமிழ்த்திறன் போட்டிப் பிரிவினரின் ஒழுங்குபடுத்தலின் கீழ் தமிழாலய மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர். இப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்கள் அனைவருக்கும் தமிழ்க் கல்விக் கழகம் பாராட்டுகளைத் தெரிவித்து மகிழ்கின்றது. இவ்வெற்றியாளர்களுக்கு 27.11.2024 டோட்முன்ட் நகரில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் அரங்கில் வெற்றிப்பதக்கம் வழங்கி மதிப்பளிக்கப்படும்.

error:
X