TBVWebLogo

29ஆவது ஆண்டில் வெற்றிநடை போடும் தமிழ்த்திறன்

தமிழ்க் கல்விக் கழகத்தால் 29 ஆண்டுகள் தொடர்ச்சியாக நடாத்தப்பட்டுவரும் தமிழ்த்திறன் போட்டியானது, தமது பிள்ளைகளின் மொழித்திறனை வளப்படுத்தும் ஆற்றல்மிக்க களமாகவே கருதுகின்றார்கள் பெற்றோர்கள். அதனாலேயே தமிழாலயங்களின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே தமிழ்த்திறன் போட்டியானது நல்விருப்பையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. இப்போட்டியின் முதல் நிலை நவம்பர் மாதம் தமிழாலய மட்டத்திலான தெரிவுநிலைப் போட்டி நடாத்தப்பட்டு, அதில் வெற்றிபெற்ற மாணவர்கள், அடுத்த நிலையாக மாநில மட்டத்தில் போட்டியிடத் தயாரானார்கள். அதன்படி 10.12.2022 சனிக்கிழமை யேர்மனியின் கனோவர், முன்ஸ்ரர், லிவகுசன், கிறேபெல்ட், லண்டவ், ஸ்ருற்காட் ஆகிய நகரங்களில் அமைக்கப்பட்ட ஆறு நிலையங்களில் காலை 09:30 மணிக்குத் தொடக்க நிகழ்வுகளுடன் தொடங்கிய இப்போட்டியில், 1044 போட்டியாளர்கள் 41 போட்டிகளில் பங்குபற்றினர். நடைபெற்ற இப்போட்டிகளைத் தமிழாலயங்களின் பயிற்றப்பட்ட, பட்டறிவுமிக்க 110 ஆசிரியப் பெருந்தகைகளும் இளைய ஆசிரியர்களும் இணைந்து, கொண்ட கொள்கையில் தளர்வுகளின்றி நேர்மையுடனும் கண்ணியத்துடனும் நடுவம்செய்து வெற்றியாளர்களைத் தீர்மானித்துள்ளார்கள். பங்கேற்ற போட்டியாளர்களில் மாநில மட்டத்தில் தமது வெற்றியை உறுதிசெய்தவர்கள், இறுதி நிலையானநாடுதழுவியமட்டத்திலானபோட்டிக்கு முன்னேறுவார்கள். இறுதிப்போட்டியானது யேர்மனியின் கிறேபெல்ட் நகரத்தில் 25.02.2023 சனிக்கிழமை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

error:
X