கலைப்பிரிவு

எமது தமிழாலய மாணவர்கள் தமிழ்மொழியைக் கற்பதோடு, தமது பண்பாட்டு விழுமியங்களைக் கற்பதற்குக் கலைகள் ஏதுவாக அமைந்துள்ளன. தமிழாலய நிர்வாகங்களின் கீழ் இயங்கிவரும் நுண்கலை வகுப்புகளிற் பரதம், வாய்ப்பாட்டு, மிருதங்கம், வீணை, வயலின் போன்ற கலைகளைக் கலை ஆசிரியர்கள் பயிற்றவித்து வருகின்றனர். இக்கலைகளோடு தமிழர் மரபுவழிக் கலைகளான கும்மி, கோலாட்டம், காவடி, கரகம், பொய்க்காற் குதிரை, நாடகம், வில்லுப்பாட்டு, கூத்து, விடுதலை நடனம், விடுதலைப் பாடல் போன்ற கலைகளையும் பயின்று வருகின்றனர். கலைத்திறன் போட்டி, தமிழர் திருநாளான பொங்கல் விழா, வாணி விழா, நத்தார் விழா போன்ற பல நிகழ்வுகளைத் தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவினர் ஒருங்கிணைத்து நடாத்தி வருகின்றனர்.

திரு. மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி

கலைப்பிரிவுப் பொறுப்பாளர்

முனைவர் விபிலன் சிவநேசன்

கலைப்பிரிவுத் துணைப் பொறுப்பாளர்

மாநிலக் கலைப்பிரிவுச் செயற்பாட்டாளர்கள்

திருமதி கருணைறாஜி பிரபாகரன்

வடமாநிலம்

திருமதி சாரதா இராஜ்குமார்

வடமத்திய மாநிலம்

திருமதி சுபாசினி சடகோபன்

மத்திய மாநிலம்

திருமதி இராசராணி ஶ்ரீவிக்னேஸ்வரமூர்த்தி

தென்மேற்கு மாநிலம்

திருமதி பகீரதி ஆனந்தசிங்கம்

தென்மாநிலம்

அடுத்துவரும் நிகழ்வுகள்

நிகழ்வுகள் இல்லை

புதியவை

பொற்ஸ்கைம் தமிழாலயத்தில் பரதக்கலைப் பயிலரங்கு தொடங்கியுள்ளது

”கல்வியும் கலையும் நம்மிரு கண்கள் நல்தமிழ்மொழி எங்கள் உயிராகும்” என்ற உயரிய சிந்தனையோடு செயலாற்றி வரும் தமிழ்க் கல்விக் கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் தமிழாலயங்களில் ஒன்றான பொற்ஸ்கைம் தமிழாலயத்தின் பெற்றோர் மற்றும் கலையார்வலர்களின்

Weiterlesen »

தமிழர் கலைகளோடு களமாடும் இளையோரின் ஆற்றல் – கற்றிங்கன்

காலைமுதல் தமிழாலய மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களெனக் கலைத்திறன் போட்டி நடாத்தப்பட்ட மண்டபத்தை நோக்கிக் காவடி, கரகம், பொய்க்காற்குதிரை மற்றும் அரங்கப்பொருள்களென உற்சாகத்தோடு வருகை தந்து போட்டிகளுக்கு அணியமாகிட 24.02.2024 சனிக்கிழமை 08:30 மணிக்குப் பொதுச்சுடர்

Weiterlesen »

தமிழர் கலைகளைப் பதியமிடும் இளையோரின் வீச்சுடன் கலைத்திறன்- 2024
கிறேபெல்ட்

17.02.2024ஆம் நாளன்று வானம் வெளித்த காலைப்பொழுதில் தமிழாலய மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களெனக் கலைத்திறன் போட்டி நடாத்தப்பட்ட மண்டபத்தை நோக்கிக் காவடி, கரகம், பொய்க்காற்குதிரை மற்றும் அரங்கப்பொருள்களென உற்சாகத்தோடு வருகை தர, அவர்களை நெறிப்படுத்தி அணியமாவதற்கான

Weiterlesen »

புலத்திலே தமிழர் கலைகளைப் பதியமிடும் இளையோரின் பாய்ச்சல்

காலைமுதல் தமிழாலய மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களெனக் கலைத்திறன் போட்டி நடாத்தபட்ட மண்டபத்தை நோக்கிக் காவடி, கரகம், பொய்க்காற்குதிரை மற்றும் அரங்கப்பொருட்களென உற்சாகத்தோடு வருகை தந்தகாட்சி தாயகத்தில் நிற்பது போன்றதொரு நினைவைத் தொட்டு நின்றது. 10.02.2024ஆம்

Weiterlesen »

வளரிளம் தமிழர்களின் கலைக்களமாய் நிமிர்ந்த கலைத்திறன் 2024 – ஸ்ருட்காட்

கலைத்திறன் போட்டிக்கு அணியமாகக் கரம்கோர்த்து நின்ற தமிழ்க் கல்விக் கழகம் காலை 07:00மணிமுதல் பரபரப்பாக நகர்ந்துசென்று,  தமிழ் தேசியத்தையும் தமிழ்மொழியையும் தம் சுவாசமாகக் கொண்டு ஈகங்கள் புரிந்தோரை  இதயங்களிற் சுமந்தவாறு 09:30  மணிக்குப் பொதுச்சுடரேற்றலோடு,

Weiterlesen »

தமிழ் மரபுத் திங்களோடு தமிழாலயங்களின் எழுகை

வெற்றுக்கரங்களோடு தாயகத்தை விட்டுத் திசைதெரியாது புலம்பெயர்ந்தபோது, தமிழருடன் கூடிப்பயணித்த மொழியையும் கலைகளையும் பண்பாட்டு விழுமியங்களையும் அடுத்த தலைமுறைக்கு ஊட்டுவதில் அமுதசுரபியாகத் துலங்கும் தமிழாலயங்கள், தமிழ் மரபுத் திங்களைச் சிறப்பாக முன்னெடுத்துவருகின்றன. தமிழர் நிலத்தின் பண்பாட்டுப்

Weiterlesen »

பதிவிறக்கங்கள்

கலைத்திறன் போட்டி சுற்றறிக்கை

கலைத்திறன் விண்ணப்பம்

கலைவிழாவிற்கான விண்ணப்பம்

படங்கள்