கலைப்பிரிவு
எமது தமிழாலய மாணவர்கள் தமிழ்மொழியைக் கற்பதோடு, தமது பண்பாட்டு விழுமியங்களைக் கற்பதற்குக் கலைகள் ஏதுவாக அமைந்துள்ளன. தமிழாலய நிர்வாகங்களின் கீழ் இயங்கிவரும் நுண்கலை வகுப்புகளிற் பரதம், வாய்ப்பாட்டு, மிருதங்கம், வீணை, வயலின் போன்ற கலைகளைக் கலை ஆசிரியர்கள் பயிற்றவித்து வருகின்றனர். இக்கலைகளோடு தமிழர் மரபுவழிக் கலைகளான கும்மி, கோலாட்டம், காவடி, கரகம், பொய்க்காற் குதிரை, நாடகம், வில்லுப்பாட்டு, கூத்து, விடுதலை நடனம், விடுதலைப் பாடல் போன்ற கலைகளையும் பயின்று வருகின்றனர். கலைத்திறன் போட்டி, தமிழர் திருநாளான பொங்கல் விழா, வாணி விழா, நத்தார் விழா போன்ற பல நிகழ்வுகளைத் தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவினர் ஒருங்கிணைத்து நடாத்தி வருகின்றனர்.
மாநிலக் கலைப்பிரிவுச் செயற்பாட்டாளர்கள்
அடுத்துவரும் நிகழ்வுகள்
நிகழ்வுகள் இல்லை
புதியவை
தமிழர் கலைகளின் வளம் தேடும் வளரிளம் தமிழர்களின் கலைத்திறனாற்றுகை ஸ்ருற்காட்
கலைகளின் ஊடாகத் தன்னையும் தனது சூழலையும் பதிவு செய்வதிலும் வினவுதலுக்குட்படுத்துவதிலும் உலகம் பின்னிற்பதில்லை. அவை தலைமுறைகள் வழியே கடத்தப்பட்டு வருவதோடு, புதிய நுண்ணறிவுசார் புலமைகளை உள்ளீர்ந்தவாறு செழுமை பெற்றுத் திகழ்கின்றன. தமிழர் கலைகள் பல
கலைத்திறன் படைக்கும் வளரிளம் தமிழர்கள்
தமிழரது கலை வடிவங்களைத் தமிழினத்தின் இளைய தலைமுறை கற்றும் கண்டும் உணரவும், அதனூடாகப் படைப்பாக்கத் திறனைப் பெறவும், தமிழர் கலைகள் அழிந்துவிடாது காக்கவும் கலை அரங்காற்றுகை செயலாக்கம் பெறுதல் வேண்டும். புலம்பெயர் நாடுகளில் மூன்றாந்
தமிழர் கலைகளோடு களமாடும் வளரிளம் தமிழர்கள் – கிறீபெலட்
தமிழரது கலை வடிவங்களைத் தமிழினத்தின் இளைய தலைமுறை கற்றும் கண்டும் உணரவும், அதனூடாகப் படைப்பாக்கத் திறனைப் பெறவும், தமிழர் கலைகள் அழிந்துவிடாது காக்கவும் கலை அரங்காற்றுகை, செயலாக்கம் பெறுதல் வேண்டும். புலம்பெயர் நாடுகளில் மூன்றாந்
கலைத்தமிழோடு களமாடும் வளரிளம் கலைஞர்களின் கலைத்திறனாற்றுகை – கற்றிங்கன்
தமிழரது கலை வடிவங்களைத் தமிழினத்தின் இளைய தலைமுறை கற்றும் கண்டும் உணரவும், அதனுடாகப் படைப்பாக்கத் திறனைப் பெறவும், தமிழர் கலைகள் அழிந்துவிடாது காக்கவும் கலை அரங்காற்றுகை, செயலாக்கம் பெறுதல் வேண்டும். புலம்பெயர் நாடுகளில் மூன்றாந்
தமிழர் திருநாளில் பண்பாட்டுப் படையலிடும் தமிழாலயங்கள்
தமிழ்க் கல்விக் கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் 100 மேற்பட்ட தமிழாலயங்கள் தமிழ்மொழியோடு, தமிழினத்தின் பண்பாட்டுப் பனுவல்களை எமது அடுத்த தலைமுறைத் தமிழர்களுக்கு ஊட்டி வருகின்றன. ஆண்டின் தொடக்கமான தை மாதத்திலே உலகை தன்