நிர்வாகப் பிரிவு
தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகப் பிரிவானது கீழே குறிப்பிடப்பட்டுள்ள செயற்பாடுகளை நிர்வகித்து வருகின்றது.
• தமிழ்க் கல்விக் கழகம் மற்றும் தமிழாலயங்களுக்கான விழாக்கள், பயிற்சிப் பட்டறைகள், செயலமர்வுகள் மற்றும் கலந்துரையாடல்களுக்கான நாட்களைத் தீர்மானித்தலும் அவற்றில் மாற்றங்கள் செய்வதற்கான செயற்பாடும்.
• தமிழ்க் கல்விக் கழகத்தின் சுற்றறிக்கை போன்ற எழுத்து வடிவிலான ஆவணங்களைத் தமிழாலயங்களுக்கு அனுப்புதல்.
• தமிழ்க் கல்விக் கழகத்தின் எல்லாவகையான விழாக்கள், பயிற்சிப் பட்டறைகள், செயலமர்வுகள் மற்றும் கலந்துரையாடல்கள் போன்றவற்றிற்கான முதற்கட்டப் பணிகளை ஒழுங்குசெய்தல்.
• தமிழ்க் கல்விக் கழகத்திலிருந்து கடிதங்கள், நற்சான்றிதழ்கள் மற்றும் தகைமைச் சான்றிதழ்கள் போன்றவற்றைப் பெறுவதற்கான தொடர்புகளை ஏற்படுத்துதல்.
• தமிழ்க் கல்விக் கழகத்தின் விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகள் போன்றவற்றிற்கு நகரபிதாக்கள், அரசியல் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் சொந்த நிறுவனங்கள் வைத்திருப்பவர்களை அழைப்பதற்கான தொடர்புகளை மேற்கொள்ளுதல்.