TBVWebLogo

தமிழர் திருநாளில் வெளியிடப்பட்டுள்ளது வெளிச்சவீடு

தமிழ்த் தேசத்துக்குச் சொந்தமான வள்ளுவர் நாட்காட்டியின் கணிப்பின்படி இன்று 15.01.2023 தைத்திங்கள் முதலாம் நாள். தமிழர்கள் இத்திருநாளில் இயற்கைக்குக் குறிப்பாகக் கதிரவனுக்கு நன்றி சொல்வதுடன், புத்தரிசியில் பொங்கி உற்றார் உறவினர்களுடன் பகிர்ந்துண்டு மகிழுதலும் ஆடிப்பாடிக் கொண்டாடிப் புத்தாண்டை வரவேற்பதும் தமிழர்களின் பண்பாட்டு நிகழ்வாகும்.
33 ஆண்டுகளுக்கு மேலாக யேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு தாய்மொழியையும் தமிழர் பண்பாட்டையும் கற்பித்துவரும் தமிழ்க் கல்விக் கழகம், அதன் நடுவச் செயலகத்தில் முன்னிலைச் செயற்பாட்டாளர்கள், நிர்வாக ஆளுநர்கள் அவர்களின் குடும்பத்தினரும் ஒருங்கிணைந்து பொங்கல், புத்தாண்டு நிகழ்வைச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
நிகழ்வின் முக்கிய நிகழ்வாக 2022ஆம் ஆண்டு தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாக ஒருங்கிணைப்பில் இயங்கும் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களின் மாணவர்கள், ஆசிரியரக்ள், பெற்றோர்கள் மற்றும் நிர்வாகப் பணியாளர்களின் உழைப்பின் செயல்திறனைத் தொகுத்து, சிறப்பு அறிக்கையாக வெளியிடபப்ட்டது. அதன் முதற்படியை அப்பிரிவின் பொறுப்பாளர் திரு. தர்மலிங்கம் தீபன் அவர்கள் வெளியிட்டு வைக்க, தமிழ்க் கல்விக் கழகத்தின் முன்னாள் கலைப்பிரிவுப் பொறுப்பாளர் திரு. நவரட்ணம் மனோகரன் அவர்கள் பெற்றுக் கொண்டு வாழ்த்தினார்.
இத்தொகுப்பறிக்கை தமிழாலயங்களின் பெற்றோர்கள், ஆசிரியரக்ள், நிர்வாகத்தினருக்கும் ஏனைய பொதுநிறுவனங்களுக்கும் வழங்கப்படவுள்ளதுடன், பெப்ரவரி மாதத் தொடக்கத்திலிருந்து tbvgermany.com என்ற எமது இணையத்தள முகவரியில் பார்வையிடலாம்.
„பண்பட்ட நிலத்துப் பயிர் செழித்தோங்கும்” என்பது பொய்யாமொழி

error:
X