TBVWebLogo

திருமதி. இராசாராணி ஸ்ரீவிக்கினேஸ்வரமூர்த்தி அவர்களுக்கு பணிநிறைவுச் சிறப்புப் பாராட்டு விழா

யேர்மனியில் தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழியங்கும் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களில் ஒன்றான டார்ம்ஸ்ரட் றோஸ்டோர்வ் தமிழாலயத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நிர்வாகியாகப் பணியாற்றிய திருமதி இராசாராணி ஸ்ரீவிக்கினேஸ்வரமூர்த்தி அவர்கள் 21.01.2023 தனது நிர்வாகிப் பணியை நிறைவு செய்துள்ளார்.
திருமதி இராசாராணி ஸ்ரீவிக்கினேஸ்வரமூர்த்தி அவர்கள் தனது நிர்வாகப் பணிக்காலத்தில் டார்ம்ஸ்ரட் மற்றும் அதன் அருகிலுள்ள நகரங்களின் தமிழ்ப் பிள்ளைகளுக்கு எமது தாய்மொழி, கலை, பண்பாட்டைச் சிறப்பாகக் கற்பித்ததுடன், தனது நிர்வாக ஆளுமையாலும் இறுக்கமான கட்டமைப்பாலும் தனது தமிழாலயம் நாடுதழுவிய மட்டத்தில் கல்வி, கலை, விளையாட்டுப் போன்ற விடயங்களில் பல வெற்றிகளைத் தமதாக்கிச் சாதனை படைத்துள்ளார். அவரின் தன்னலமற்ற தமிழ்ப்பணியைப் பாராட்டி நன்றி கூறும்வகையில், தமிழ்க் கல்விக் கழகப் பொறுப்பாளரின் ஒருங்கிணைப்பில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், நகரத்தின் தேசிய செயற்பாட்டாளர்கள் மற்றும் முன்னாள் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் இணைந்து பணிநிறைவுக்கான பாராட்டு விழாவெடுத்துச் சிறப்பாக வாழ்த்திக் கொண்டாடினார்கள். இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் பிரதிநிதி, முன்னாள் மாணவர்கள் நிகழ்த்திய பாடல், கவிதை, நடனம், பேச்சு போன்ற நிகழ்வுகள் விழாவை மேலும் மெருகூட்டியது.
நிர்வாகப் பணியை நிறைவுசெய்யும் திருமதி இராசாராணி ஸ்ரீவிக்கினேஸ்வரமூர்த்தி அவர்கள் தொடர்ந்தும் டார்ம்ஸ்ரட் தமிழாலயத்தில் மூத்த ஆசிரியர் என்ற அங்கீகாரத்துடன் தொடர்ந்தும் ஆசிரியராகவும் நிர்வாக ஆலோசகராகவும் பணியாற்றவுள்ளார்.
பண்பட்ட நிலத்துப் பயிர் செழித்தோங்கும்” என்பது பொய்யாமொழி
டார்ம்ஸ்ரட் தமிழாலயத்தில் இசை ஆசிரியராகவும் தமிழாசிரியராகவும் பணியாற்றிய முதிர்ந்த பட்டறிவுடன் தமிழாலயத்தின் நிர்வாகியாக திருமதி சுகன்யா சுதாகரன் அவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளார். டார்ம்ஸ்ரட் தமிழாலயத்தின் தலைமை மாலுமியாக அடுத்த பல ஆண்டுகளுக்கு எமது தமிழ்ப் பிள்ளைகளுக்கு வழிகாட்டவுள்ளார்.

error:
X