தமிழ்த்திறன் பிரிவு
தமிழாலயங்களில் தமிழ்மொழியைப் பயின்றுவரும் மாணவர்கள் தாம் பயிலும் மொழியின் வளத்தை மேம்படுத்தும் பொருட்டு ஆண்டுதோறும் தமிழ்க் கல்விக் கழகம் தமிழ்த்திறன் போட்டியை நடாத்தி வருகின்றது. தமிழாலயம், மாநிலம், இறுதி என மூன்று மட்டத்தில் நடாத்தப்பட்டுவரும் தமிழ்த்திறன் போட்டி, ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நறுந்தொகை, திருக்குறள் போன்ற மனனப் போட்டிகளும் உரையாற்றல், கவிதை, வாசிப்பு, உறுப்பமைய எழுதுதல், சொல்வதெழுதுதல், கட்டுரை, ஓவியம் போன்ற போட்டிகளும் நடைபெற்று வருவது சிறப்பிற்குரியது.
அடுத்து வரும் நிகழ்வுகள்
மார்ச் 2025
08மார்ச்நாள் முழுவதும்தமிழ்த்திறன் இறுதிப் போட்டி 2024நிகழ்வுகள் :தமிழ்த்திறன்
நேரம்
நாள் முழுவதும் (சனி)
இடம்
Hans-Jonas-Gesamtschule Neuwerk
Nespelerstraße 75
புதியவை
தமிழ்த்திறன் மாநிலப் போட்டி 2024
தமிழ்க் கல்விக் கழகத்தின் தமிழ்த்திறன் பிரிவால் ஆண்டுதோறும் தமிழாலய மாணவர்களிடையே நடாத்தப்பட்டுவரும் தமிழ்த்திறன் போட்டி தமிழாலயம், மாநிலம் மற்றும் யேர்மனி தழுவிய மட்டத்தில் என மூன்று நிலைகளில் நடாத்தப்பட்டு வருகின்றன. தமிழாலயங்கள் தமது மாணவர்களிடையே
தமிழ்க் கல்விக் கழகத்தின் கீழியங்கும் தமிழாலயங்களை ஒருங்கிணைத்து நடைபெறும் தமிழ்த்திறன் மாநிலப்போட்டி 2024
சிறப்பு மதிப்பளிப்பு
தமிழ்க் கல்விக் கழகத்தினால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் தமிழ்த்திறன் போட்டியின் 2023ஆம் ஆண்டிற்கான தமிழ்த்திறன் இறுதிப் போட்டியும் அதன் முத்தகவை நிறைவு விழாவும் 02.03.2024 சனிக்கிழமை முன்சன்கிளாட்பாக் நகரில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கடந்த 30 ஆண்டுகள்
சிகரம் தொட்ட தமிழ்த்திறன் போட்டியின் முத்தகவை நிறைவு
1993ஆம் ஆண்டு மாமனிதர் இரா. நாகலிங்கம் ஐயா அவர்களினால் வித்திடப்பட்ட தமிழ்த்திறன் போட்டி, தமிழ்க் கல்விக் கழகத்தின்; வரலாற்றுத் தடங்களில் தனக்கெனத் தனிச்சிறப்புடன் வெற்றி நடைபோட்டு வருகிறது. தமிழாலயங்களில் தமிழ் பயின்றுவரும் மாணவர்களில் மொழித்திறனாளர்கள்,
தமிழ்த்திறன் போட்டி 2023 – மாநிலம்
தமிழ்க் கல்விக் கழகத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் தமிழாலய மாணவர்களிடையே ஒவ்வொரு ஆண்டும் நடாத்தப்பட்டுவரும் தமிழ்த்திறன் போட்டியின், 2023ஆம் ஆண்டிற்கான தமிழாலயத் தெரிவுப் போட்டி நிறைவுபெற்றுள்ளது. இப்போட்டியில் போட்டியிட்ட போட்டியாளர்களிலிருந்து வெற்றியாளர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். அவர்களுக்கான இரண்டாம்